search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம்"

    சுமார் 150 ஆண்டுகால பழமைவாய்ந்த சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய தனிச்சிறப்பு தற்போது கிடைத்துள்ளது. #chennaicentral
    சென்னை:

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

    இதையடுத்து, வெளியூர்களில் இருந்து சென்னை வரும் ரெயில் பயணிகளின் டிக்கெட்டுகளில் முன்னர் சென்னை சென்ட்ரல் என இருந்த பெயர் மாற்றப்பட்டு, ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆங்கிலத்திலும் Puratchi Thalaivar Dr MGR Central railway station என அச்சிடப்பட்டுள்ளது. இதேபோல், சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் முகப்பு வாயிலின் உச்சியில் உள்ள பெயர் பலகை, ரெயில் நிலையத்தின் நடைமேடைகளில் உள்ள அறிவிப்பு பலகைகள் யாவும்  ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கணிப்பொறியில் காணக்கிடைக்கும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பிடியாவிலும் ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



    மேலும்,வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்களில் உள்ள பெட்டிகளில் செருகி வைக்கப்படும் தகடுகளிலும் பெயர் மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இடவசதி கருதி ரெயில்களில் உள்ள பெட்டிகளில் ’எம்.ஜி.ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல்’ என மட்டும் குறிப்பிடுமாறு ரெயில்வே துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.  

    இந்நிலையில், தற்போது சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய தனிச்சிறப்பு தற்போது கிடைத்துள்ளது.

    நாட்டிலேயே மிக நீளமான பெயர் கொண்ட ரெயில் நிலையமாக அரக்கோணம் - ரேணிகுண்டா வழித்தடத்தில் உள்ள ’வெங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா’ (Venkatanarasimharajuvaripeta) என்ற ரெயில் நிலையம் முன்னர் அறியப்பட்டிருந்தது.



    ஆங்கில எழுத்தில் பார்த்தாலும், தமிழ் அல்லது தெலுங்கு எழுத்து வடிவத்தில் பார்த்தாலும் வெங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா’ ரெயில் நிலையத்துக்கு இருந்த அந்த தனிச்சிறப்பை ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ (Puratchi Thalaivar Dr MG Ramachandran Central railway station) தற்போது சென்னை சென்ட்ரல் தட்டிப்பறித்து விட்டது, குறிப்பிடத்தக்கது. #chennaicentral #Nationwideimportance #mgramachandran #mgramachandranrailwaystation
    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பிளேடால் அறுத்து வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய அளவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர்.

    அவர்களை கண்காணித்த போலீசார் பிடிக்க முயன்றபோது செல்போனை கீழே போட்டு விட்டு ஓடினர். போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் யானை கவுனியை சேர்ந்த ராஜு, கணேசன் என தெரியவந்தது.

    போலீசார் இருவரையும் அழைத்து செல்ல முயன்ற போது திடீரென அதில் ஒருவர் பிளேடால் கையை அறுத்துக் கொண்டதாக தெரிகிறது.

    போலீசாரிடம் தப்பி சென்ற இருவரும் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு தனக்கு தானே பிளேடால் வெட்டிக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    எதற்காக அவர்கள் போலீசை பார்த்து பயந்து ஓடினார்கள். ரெயில் நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட வந்தார்களா? என்பது பற்றி சென்ட்ரல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×